குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வரும் சி வி பி அறக்கட்டளை சென்னை அப்போலோ மருத்துவர் மனை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-01-08 08:58 GMT
குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
புதுக்கோட்டை சி வி பி அறக்கட்டளை சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களோடு கலந்து கொண்டு பயன்பெற்றனர்.சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை எடுத்து அந்த முடிவுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை செய்தனர். இதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சி வி பி அறக்கட்டளை மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இலவசமாக செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.