கண் பரிசோதனை முகாம்
மணலூர்பேட்டையில் இலவச கண் மருத்துவமனை முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-16 04:30 GMT
மருத்துவ முகாம்
மணலுார்பேட்டையில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, அரிமா சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் தலைவர் அம்மு ரவிச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 147 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 62 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.