கஞ்சா நகரம் உத்தராபதியார் கோவிலில் பிள்ளைக்கறி அமுது படையல்
மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் உத்ராபதியார் கோயிலில் சிறுத்தொண்டர் அமுதுபடையல் விழா நடந்தது.
சிவபக்தரான சிறுத்தொண்டரின் பக்தியை சோதிக்க அவரிடம் சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டதாகவும், அதன்படி சிறுத்தொண்டரும் இறைவனுக்கு பிள்ளைக்கறி அமுது படைத்ததாகவும் ஐதீகம். இந்த ஐதீகத்தை நினைவுகூறும் வகையில் மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள உத்ராபதியார் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் சித்திரை மாத பரணி நட்சத்திர தினத்தில் வழங்கப்படும் சீராளன் அருள்பிரசாதத்தை பெற்று உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் கோயிலில் படையலிட்ட உணவினை அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர். மேலும், பக்த சீராளன் பிள்ளைக்கறியை படையலிட்டு, அதனை திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மடிப்பிச்சை பெற்று அதனை கோயில் வாசலிலேயே உட்கொண்டனர்.