குப்பையில்லா குமரி : கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவிலில் அணு விஞ்ஞானி முனைவர் டேனியல் செல்லப்பா தலைமையில் குப்பையில்லா குமரி திட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-01 07:55 GMT

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு 

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலுக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தினை  குப்பையில்லா குமரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் அணு விஞ்ஞானி முனைவர் டேனியல் செல்லப்பா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்   நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.    

கூட்டத்தில் குப்பையில்லா குமரி என்ற திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். எனவே, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாகும் மின்னணு கழிவுகளை தகுந்த முறையில் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  என தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அணு விஞ்ஞானி முனைவர் டேனியல் செல்லப்பா வலம்புரிவிளையில் அமைக்கப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற நிகழ்வுகளில் நகராட்சி ஆணையர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



Tags:    

Similar News