நாகை அவுரித்திடலில் இருந்து பாலின சமத்துவ பேரணி
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் நாகப்பட் டினம் அவுரித்திடலில் இருந்து பாலின சமத்துவ பேரணி நடைபெற்றது.
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் நாகப்பட் டினம் அவுரித்திட லில் இருந்து பாலின சமத்துவ பேரணி நடந்தது. பேரணிக்கு உதவி திட்ட அலுவ லர் இந்திராணி வரவேற்றார்.
திட்ட இயக்குநர் (மக ளிர் திட்டம்) முருகேசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி நக ரின் முக்கிய வீதிகள் வழி யாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது. குழந்தைதிருமணத்தை தடுப்போம். குடும்ப வன்முறையை தடுப்போம்.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்களுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு கொடுப்போம்.பெண்களின் காப்பை உறுதி செய்வோம். பெண்களுக்குஊட்டசத்திற்கு தேவை யான உணவை உறுதி செய்வோம். பாலியல் வன்கொடு மைகளுக்கு, பெண்களின் உரி மைகளை பாதுகாப் போம். பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டுவோம் என்பது உள்ளிட்ட . கோஷங்களை எழுப்பி சென்றனர்.
இதை தொடர்ந்து பாலின சமத்துவ உறு தி மொழியை எடுத்து கொண்டனர். ஏஎஸ்பி லலித்குமார், உதவி திட்ட பாது இயக்குநர்(ஊராட்சிகள்) முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள் பலர்கலந்து கொண்டனர்