நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்
தை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருர் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
Update: 2024-01-21 01:03 GMT
தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிா்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று தை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இன்று தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.