மதுரையில் ஆபத்தான முறையில் இயக்கப்படும் அரசு பேருந்து
மதுரையில் ஆபத்தான முறையில் இயக்கப்படும் அரசு பேருந்தால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தின் பழுதடைந்த பாகங்களை கயரால் கட்டி வைத்து ஆபத்தான முறையில் இயக்கப்படும் அரசு பேருந்து. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர், புறநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து அதிகமாக பள்ளி கல்லூரி மாணவர்களே சென்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் கல்லுப்பட்டி செல்லும் அரசு பேருந்து பாகங்கள் பழுதடைந்த நிலையில்,
அதனை சரி செய்யாமல் கயர்களால் இருபுறமும் ஜன்னலில் கட்டி வைத்து ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல பேருந்துகள் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் இயக்கப்பட்டு வருவதால் இதனை முறையாக சரி செய்து இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.