மேட்டூரில் அரசு பேருந்து, தனியார் பேருந்து மோதல்.
மேட்டூரில் அரசு பேருந்தும். தனியார் பேருந்தும் மோதி விபத்து.;
By : King 24x7 Website
Update: 2023-12-20 17:33 GMT
மேட்டூரில் அரசு பேருந்தும். தனியார் பேருந்தும் மோதி விபத்து.
சேலம் மாவட்டம்,மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேட்டூர் தூக்கணாம்பட்டி பேருந்து நிறுத்தம் வந்தபோது, சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பேருந்து முன் பக்க கண்ணாடி சேதம் அடைந்தது .இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து மேட்டூர் போலீஸ் சார் விசாரணை செய்து வருகின்றனர்.