விழுப்புரத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க கூட்டம்

விழுப்புரத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.;

Update: 2024-05-30 16:40 GMT
புகைப்படம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம் நடை பெற்றது. இதற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் நிலாஒளி, அமைப்பு செயலாளர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் ரவீந்திரநாத், பொது செயலாளர் சாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர், கூட்டத்தில், அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.

Advertisement

பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு மாவட்ட வாரியாக உள்ள ஊதிய முரண்பாடுகளை களைதல், தமிழ்நாடு முழுவதும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாக அலுவலர் சிங்காரம், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் சவுரிராஜன், அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க செயலாளர் கல்யாண சுந்தரம், அரசு பணியாளர் சங்கம் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பொது செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News