சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் வருகை
By : King 24X7 News (B)
Update: 2023-11-02 10:50 GMT
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வருகிற மூன்றாம் தேதி நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்க உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மருத்துவ துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்