பனியால் வெடிப்புக்குள்ளாகி உதிரும் திராட்சைகள்
பனியால் வெடிப்புக்குள்ளாகி திராட்சைகள் உதிர்ந்து வருகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 16:06 GMT
திண்டுக்கல் சிறுமலை அடிவாரப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடியில் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. சிறுமலை அடிவாரத்தில் விளையும் திராட்சைகள் நல்ல சுவையாக இருப்பதால் வரவேற்பு உள்ளது.
இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகம் காரணமாக கொடியில் காய்த்துள்ள திராட்சை பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தரமான பழங்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.