அப்பா பைத்தியம் சாமி கோவிலில் குரு பூஜை
சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் நடந்த குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-19 01:23 GMT
குருபூஜை
சேலம் சூரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அப்பா பைத்தியம் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குருபூஜை நடைபெற்றது. அதன்படி அதிகாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சத்குரு அப்பா பைத்தியம் சாமி வேள்வியுடன் குரு பூஜை தொடங்கியது. பின்னர் காலை 7.30 மணிக்கு ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த குரு பூஜையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.