ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் வாகனம் மோதி பலி
சேலத்தில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-16 07:19 GMT
சேலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் மகேஷ் அரவிந்த் (வயது 25). இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி இரவு நகரமலை அடிவாரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயம் அடைந்த மகேஷ் அரவிந்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.