ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-01-12 02:24 GMT
புதுக்கோட்டை நகரப் பகுதியான திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த 16-அடி உயரம் கொண்ட ஸ்ரீ வரதவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். வழக்கம்போல் நடைபெற்ற இந்த ஹனுமன் ஜெயந்தி விழாவில் ஸ்ரீ வரதவீர ஆஞ்சநேயருக்கு பதினோறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ராஜ அலங்கார வேடத்தில் 1008 - வடை மாலை சூட்டப்பட்ட ஆஞ்சநேயருக்கு பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கப்பட்டது எனவே மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்தனர்
Tags:    

Similar News