தென்காசி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள சுபிட்ஷ வழித் துணை ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன்ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமஞ்சனம், மூலமந்திர ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. செங்கோட்டை ராம பக்த ஆஞ்சனேயா் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், துா்கா ஹோமம், சுதா்சன ஹோமம், ஆஞ்சனேயா் மூல மந்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விமானம் அபிஷேகம், தொடா்ந்து மகாபிஷேகம், பிற்பகலில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கீழப்பாவூா் ஸ்ரீருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் (பஜனைக் கோயில்) அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, திருமஞ்சனம், மூல மந்திர ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு, தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.