கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு கத்தி குத்து
கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு கத்தி குத்து - 2பேர் மீது வழக்கு.;
Update: 2024-03-24 06:11 GMT
வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கண்ணக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ் (22). இவர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஜய் (23) என்பவரும் நண்பர்கள். சுரேஷிடம் இருந்து அஜய் கடந்த நான்கு மாதங்களும் முன்பு ரூபாய் 2 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்த பணத்தை சுரேஷ் திரும்ப கேட்டதால் இருவர்களுடைய பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய் அதே ஊரை சேர்ந்த ரதிஷ் 24) என்பவருடன் சுரேஷ் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அஜய் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்தியுள்ளார். உடன் சென்ற ரதீசம் தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றதும், இருவரும் அங்கு இருந்து தப்பி சென்றனர்.படுகாயம் அடைந்த சுரேஷை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.