மழையால் தணிந்த வெப்பம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் பெய்த மழையால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

Update: 2023-11-26 13:50 GMT

குமாரபாளையத்தில் பெய்த மழையால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
.   நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால்,  வெப்பம் தாங்காமல்  கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 03:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்தது. சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகே கோம்பு பள்ளத்தில் அதிக நீர் ஓடியது. கார்த்திகை தீபத்திருவிழா  சமயத்தில் துணிக்கடை, நகைக்கடைகளில் வியாபாரம் களை கட்டிய நேரத்தில் மழை வந்ததால், வியாபாரம் பாதித்தது. சாலையோர வியாபாரிகள் கடும் இடைஞ்சலுக்கு ஆளாகினர்.
Tags:    

Similar News