இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது.
Update: 2024-05-07 01:14 GMT
தமிழக முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வரும் சூழலில் தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினந்தோறும் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி வருகின்றது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வரும் சூழலில் நேற்று இரவு 10 மணி முதல் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது மேலும் பல்வேறு இடங்களில் விடிய விடிய மின்நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.