புதுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை.
Update: 2023-11-19 02:02 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.