இரவில் கனமழை - இயல்பிற்கு திரும்பிய சில்லென்ற கோவை
கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவை:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கோவை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம்,போத்தனூர், சிவானந்த காலனி,ரயில் நிலையம்,ரேஸ்கோர்ஸ், மசக்காளி பாளையம்,பீளமேடு,உப்பிலிபாளையம், புலியகுளம்,காந்திபுரம் உக்கடம் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் பகுதியில் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அடுத்த ஒரு சில தினங்களுக்கும் கோவை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.