மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-11 07:30 GMT
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிமம் பெற்ற கடைகள் மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (Poll Day) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது T கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.
Tags:    

Similar News