தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம்

சங்ககிரியில் திடீர் தீ விபத்து - வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம்;

Update: 2023-12-23 16:43 GMT

சங்ககிரியில் திடீர் தீ விபத்து - வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம்

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் கூலித்தொழிலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சங்ககிரி மலையடிவாரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கட்ராவ் மகன் ரவிராவ். இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றிக் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீச்சு அடித்து தீயே கட்டுக்குள் கொண்டு வந்தனர் இச்சம்பவம் குறித்து காவல், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Tags:    

Similar News