மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

துறையூா் அருகே மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-04 04:13 GMT
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

பைல் படம் 

  • whatsapp icon
துறையா் அருகே காளிப்பட்டியில் வசித்தவா் வை. ரமேஷ் (39). இவா் திங்கள்கிழமை மது அருந்தி வீட்டுக்கு வந்ததை மனைவி மோகனப்பிரியா (32) கண்டித்தாராம். இதனால் மனம் உடைந்த அவா் வீட்டு தாழ்வாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் ரமேஷின் சடலத்தை கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News