பிரதமர் மோடிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் -ஓபிஎஸ்
பிரதமர் மோடிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கூறினார்.
ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கழகப் பொதுக் குழு கூட்டத்தில் வன்முறை வெறியாட்டங்கள் துரோகங்கள் இவைகளுக்கு உட்படுத்தப்பட்டு தன்னந்தனியாக தான் தனிமைப்படுத்தப்பட்ட போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்ற கூட்டணி கட்சிகள் மட்டுமே இருக்கும் அந்த கூட்டணியில் எந்தவித கட்சியும் எந்த ஒரு பதிவும் இல்லாத சுயேட்சையான தனக்கு வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நன்றியை என் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பேன் என்று தெரிவித்தார் .
தொடர்ந்து பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும் மோடியின் ஆட்சியை உலக நாடுகளே கொண்டாடும் விதமாக பாராட்டி வருவதாக தெரிவித்தவர் மோடியின் ஆட்சி காலத்தில் நாமெல்லாம் வாழ்வதையே பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பிரதான பிரச்சனையாக இருக்கக்கூடிய வளர்ச்சிக்கு தீர்வாக வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஒரு சொட்டு கூட கடலுக்கு கலக்காத வண்ணம் ராமநாதபுரத்திலேயே தேக்கி வைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவிற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாகவே அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருவதாகவும் அது தொடர்பாக தங்கச்சி மடத்தில் மீனவர்களிடம் உரையாடிய போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை உருக்கமாக எடுத்து வைத்ததாகவும் அப்போது அங்கிருந்து இலங்கையினுடைய அமைச்சருக்கு போன் செய்த போது அண்ணா எதிர்வரும் நான்காம் தேதிக்குள் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை செய்யப்படுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததோடு இரண்டு முறை எல்லை தாண்டிய மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய சட்ட நடைமுறையை கையாண்டு வருவதாகவும் தெரிவித்ததாக கூறினார்.