வாலிபால் போட்டியில் ஐ.சி.எப்., அணி சாம்பியன்
Update: 2023-11-29 01:26 GMT
திருவள்ளூர் மாவட்ட வாலிபால் அசோசிேயஷன் மற்றும் தளபதி கல்லுாரி ஆகியவை இணைந்து, வடக்கு மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் ஆண்கள் மாநில வாலிபால் போட்டியை, இம்மாதம் 25, 26ம் தேதிகளில் திருத்தணியில் நடத்தின. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இருந்து, 18 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி போட்டியில் சென்னை ஐ.சி.எப்., எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற ஐ.சி.எப்., அணி, 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது. மூன்றாம் இடத்தை ராணிப்பேட்டை தேசிங்கு அணியும், நான்காவது இடத்தை வேலுார் அகாடமி அணியும் பிடித்தன. போட்டிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட வாலிபால் அசோசிேயஷன் சங்க செயலர் குப்புசாமி, பொருளாளர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.