பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி காயம்
பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி காயமடைந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 14:00 GMT
கோப்பு படம்
பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி காயம் பென்னாகரம், டிச. 17: பென்னாகரம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி காயமடைந்தார். பென்னாகரம் அருகே உள்ள நலப்பரம்பட்டி சேர்ந்த கரூரான் மகன் காவேரி(50). இவர், தனது வீட்டிலிருந்து நலப்பரம்பட்டியில் உள்ள மகனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து பென்னாகரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் காயமடைந்த காவேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.