தொழிலாளர் நலசங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
பெரம்பலூரில் மருத்துவர் அறக்கட்டளை சங்கம், மற்றும் தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நகர சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில்உள்ள தனியார் அரங்கில் பெரம்பலூர் நகர மருத்துவர் அறக்கட்டளை சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் நகர சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வரவேற்புரை ஆற்றினார்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பிரபு, மாவட்ட அவை தலைவர் விஜயகுமார், மாவட்ட துணை கொள்கை பரப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட சங்க ஆலோசகர் அங்கமுத்து, அமைப்பாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி பாஸ்கர், முன்னாள் நகர செயலாளர் தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில், நகர சங்க புதிய நிர்வாகிகளாக, நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி , நகர செயலாளர் ராஜா, நகர பொருளாளர் தங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர், இதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர் ராஜ்மோகன், மாநில மண்டல செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் குமார் , ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மூன்றாண்டு காலம் பதவியில் நீடிக்க வேண்டும், இடையில் பதவி விலகக் கூடாது, புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், 01.01. 2024 முதல் புதிய விலை பட்டியலின்படி அனைத்து கடைகளில் செயல்பட வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன,
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், புதிய விலைப்பட்டியல் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர ஒருங்கிணைப்பாளர் குருசாமி, நகர துணை செயலாளர் வெங்கடேசன், பாண்டித்துரை, முத்துசாமி, நகரத் துணைத் தலைவர் சண்முகம் , நகர இளைஞரணி தலைவர் பாபுராஜ், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நேரடியாக மாவட்ட செயல் தலைவர் கருணா நன்றியுரை ஆற்றினார்.