அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

Update: 2024-01-09 06:55 GMT

பதவியேற்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு அனைத்து வணிகர் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் முத்துக்கருப்பன், மாநில இணைச் செயலாளர்கள் மகாலிங்கம், முருகன், சீனிவாசன் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவகுமார், திம்மலை சுப்ரமணி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா, வணிகர் சங்க கொடியேற்றி 2024ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News