திருவண்ணாமலையில் வாழும் கலை அமைப்பின் ஆசிரமம் திறப்பு

Update: 2023-11-24 06:13 GMT

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதை சந்திரலிங்கம் அருகே தமிழகத்தில் முதல் முறையாக வாழும் கலை ஆசிரமம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யகவாசனம், வாஸ்து சாந்தி, வேத ஆகம திருமுறை பாராயணம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை குருதேவர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹீதி, மகா தீபாராதனை நடைபெற்று ஆசிரமம் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

உலகெங்கிலும் 180 நாடுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையுடன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் ஆன்மிக தளத்தில் செயல்படுகிறது வாழும் கலை அமைப்பு. தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலையில் ஆன்மீக நல்வாழ்வை வளர்ப்பதற்கும், பழங்கால மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக வாழும் கலை ஆசிரமம் திறக்கப்பட்டது ‌ "வாழும் கலை" என்ற பதாகையின் கீழ் நிறுவப்படும் இந்த ஆசிரமம், தியான வகுப்புகளை வழங்குவதற்கும், வேத பாடசாலையின் துவக்கத்தின் மூலம் வேத ஞானத்தின் வேர்களை வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் வாழும் கலையின் ஆசிரமத்தை வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திறந்து வைத்தார். ஆசிரமம் மூன்று நோக்கங்களுடன் நிறுவப்பட்டது: 1. தியான வகுப்புகள்: 2. வேத பாடசாலா: 3. பஞ்சபூத ஸ்தலங்களில் இருப்பது: ஒவ்வொன்றும் அதன் இருப்பிடத்தின் தனித்துவமான ஆற்றலுடன் இணைக்கப்பட்டு, ஆன்மீக வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்துகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது, உலக பிரசித்த பெற்ற ஆன்மீகத்தளத்தில் ஆன்மீகத்தை நோக்கி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். அதனால் இங்கு ஆசிரமம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு ஆஷ்ரம் திறந்து வைக்கப்படுகிறது. தவறான பாதைகளில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களை வழிமுறை படுத்துவதற்கு பயிற்சி வகுப்புகள் இங்கே நடைபெற உள்ளது. அதற்காக இந்த ஆசிரமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் நதிகளை இணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளங்களை எல்லாம் தூர் வாருவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். நீர் நிலைகளில் உள்ள மாசு பொருட்கள் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. வருங்காலங்களில் தண்ணீர் தேவைக்காக நதிகள் இணைப்பு அவசியமாகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

Similar News