கரூர் அருகே சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு

கரூர் அருகே மாணாக்கர்களின் திறமையை மேம்படுத்தவே சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்பட்டது.

Update: 2024-03-03 12:33 GMT

சர்வதேச மைதானம் திறப்பு

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காவல் நிலையம் எதிரில், புதிதாக கரூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக சர்வதேச சிந்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் இன்று துவக்கப்பட்டது. இந்த மைதானத்தை புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் திறந்து வைத்தார்.

இந்த மைதானம் குறித்து ஸ்கேட்டிங் பயிற்சியாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, "ஸ்கேட் தமிழா" என்ற பெயரில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஸ்பீட் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச தரத்திலான 200 மீட்டர் அளவுள்ள சிந்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மானாக்கர்களுக்கு தரைத்தளத்தில் தான் பயிற்சி கொடுத்தேன். அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அனைத்து மாணாக்கர்களும் பயிற்சி பெற வேண்டும் என அழைக்கிறேன். மேலும், மாணவர்களை வெற்றி பெற செய்வதற்காகவே இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணாக்கர்கள் தயக்கமில்லாமல் இந்த மைதானத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நான் செய்து தருவேன் என கூறி, உறுதி அளித்தார்.

Tags:    

Similar News