ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்ற இளைஞன் காளை முட்டியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 05:48 GMT
பலி
பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்துாரில் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பார்வையாளராக பங்கேற்ற ஆலவயல் தெக்கிக் காடு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்து பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்குமார் உயிரிழந்தார்.