மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடினர்.;

Update: 2024-06-21 17:14 GMT

யோகா தினம் 

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச யோகா தினம் மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை பள்ளியின் தலைவர் க.சிதம்பரம், அவர்கள் கல்வி நிறுவனர் சுப்பிரமணியம், இயக்குநர் மணிவண்ணன், பள்ளியின் முதல்வர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது இன்று ஒருநாள் மட்டும் யோகா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தால் மட்டும் போதாது அனுதினமும் கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் உடல் நலனில் அக்கறை கொண்டு இந்த யோகாசனம் தியானம் செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement

நம் கல்வி நிறுவனர் அவர்கள் தினந்தோறும் 30 நிமிடங்கள் யோகாசனங்களை செய்து நம் உடலையும் மனதையும் நன் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் என்று அறிவுரை வழங்கினார். முதல்வர் அவர்கள் சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் ஆகவே நம் உடலை யோகாசனங்களை செய்து காக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் இவர்களை ஆசிரியப் பெருமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர் .

Tags:    

Similar News