மேட்டூரில் அதிமுக சார்பில் ஐ.டி.விங்க் ஆலோசனை கூட்டம்.
மேட்டூரில் அதிமுக சார்பில் ஐ.டி.விங்க் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 08:39 GMT
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே நவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் புறநகர் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்டமாக 900 அதிமுக தகவல் தொழில்ஙட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு சமூக வலைதளத்தில் கையாள வேண்டிய யுக்திகளுக்கான பயிற்சி பட்டறை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது .
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர் .இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.