கொல்லிமலை அரசு மாதிரி பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்ற மையம் துவக்கம்
கொல்லிமலை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் துவக்கம்;
கொல்லிமலை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் துவக்கம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல் ஜவகர் சிறுவர் மன்றம் நாமக்கல் நகரவை கோட்டை உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு மலைவாழ் மக்கள் குழந்தைகளின் நலன் கருதி கொல்லிமலை வாழவந்தி நாடு அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் துவங்கப்பட்டது.
விழாவில் மாதிரி பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கலை பண்பாட்டுதுறை சேலம் மண்டல உதவி இயக்குனர் நீலமேகம் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் பரதம், ஓவியம், தற்காப்புக்கலை, யோகா, கராத்தே, சிலம்பம், கிராமிய நடனம் போன்ற கலைகளில் நுண்கலை பயிற்சி பெறலாம். இதன் மூலம் மாவட்ட மாநில தேசிய அளவிலான கலை திறன் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்பாக அமையும். இப்பயிற்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் வறவேற்புரை ஆற்றினார். பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கலை திறமையை வெளிப்படுத்தினர். ஓவிய ஆசிரியர் அ.வெங்கடேஸ் நன்றி கூறினார். விழாவில் பரதநாட்டிய ஆசிரியை மதி வெங்கடேஷ், கிராமிய நடன ஆசிரியர் A.S.பாண்டியராஜன், ஓவிய ஆசிரியர் விஜயகுமார், தற்காப்புக் கலை ஆசிரியர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.