JCI ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் ஜே சி ஐ வார விழா கொண்டாட்டம்..
JCI ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் ஜே சி ஐ வார விழா கொண்டாட்டம்..;
JCI ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் ஜே சி ஐ வார விழா கொண்டாட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆப் ராயல் ஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் தலைவர் JFM மணிமேகலை தமிழரசன், சாசனத் தலைவர் Jc HGF சசிரேகா சதீஷ்குமார், JCOM அமைப்பின் சாசனத் தலைவர் Jc HGF தமிழரசன் முன்னாள் தலைவர்கள் Jc HGF பூபதி, Jc சுகன்யா , மண்டலம் 29 இன் தலைவர் JFS மணிகண்டன் , மண்டல துணை இயக்குனர் Jc பிரபாகரன் , மண்டல அதிகாரி Jc சதீஷ்குமார் வார விழா தலைவர் Jc சதீஷ்குமார் மற்றும் ஜே சி ஐ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறந்த கல்வி சேவை, சமூக சேவை , குருதி தானம் மருத்துவ சேவை, யோகாவில் உலக சாதனை மற்றும் சிறந்த இசைக் கலைஞர் ஆகியோருக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் மூன்று பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது. மேலும் இந்த வருடம் மிகவும் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.