வழக்கறிஞரிடம் நகை மோசடி - 2 பேர் மீது வழக்கு பதிவு
சாமியார்மடத்தில் வழக்கறிஞரிடம் நகை மோசடி செய்த இருவர் மீது வழக்கு பதிவு.;
Update: 2024-03-23 02:39 GMT
காவல்துறை விசாரணை
police station
கன்னியாகுமரி தக்கலையை அடுத்த சுவாமியார்மடம் நேதாஜி தெரு பகுதியை சேர்ந்தவர் பென்ஸ் குமார். நாகர்கோவிலில் வக்கீலாக உள்ளார். இவரது உறவினர் மகள் ஒருவர் காட்டாத்துறையில் நகைக்கடை நடத்தி வரும் மருதூர்க்குறிச்சியை சேர்ந்த நாகராஜன் அவரது சகோதரர் தங்கப் பன் ஆகியோரிடம், 85 கிராம் பழைய நகை களை கொடுத்து, அவற்றை 91கிராம் புதிய நகைகளாக செய்து தரும்படி கேட்டுள் ளார். அதற்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை கூறி அன்றைய தினம் வரும்படி கூறியுள்ளனர்.அந்நாளில் சென்று கேட்டபோது நகைகள் இன்னும் செய்து முடிக்க வில்லை என கூறியுள்ளனர். அதன்பிறகு மறுமுறை சென்று பார்த்த போது, நகைக்கடை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பென்ஸ் குமாரின் உறவினர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.