கலித்தேரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

கீழ்பென்னாத்தூர் அருகே கலித்தேரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

Update: 2023-11-24 02:48 GMT

கும்பாபிஷேகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கலித்தேரி கிராமத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டு ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு மாலையில் யாக குண்டம் அமைத்து கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி,நவக்கிரகபூஜை கள், முதல் காலயாகபூஜை, ஹோமங்கள், ரக்ஷாபந்தனம் பூரணாதி, மகா தீபாரதனை நடந்தது.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அக்ரி.எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெற்கு, எஸ்.ராமச்சந்திரன்கிழக்கு, மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு தெற்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் கிழக்கு, முன்னாள் எம். எல்.ஏ ஏ.கே.அரங்கநாதன், கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ய சி.தொப்பளான் ஆகியோர்தலைமையில் கோயில் நிர்வாகிகள் திருமூர்த்தி, கணேசன், கோபால்சாமி, ஸ்தபதி பாலாஜி ஆகியோர் முன்னிலையில் கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து விசேஷ திரவிய ஹோமம், 2ம்காலயாக பூஜை, ஹோமம், நாடிசந்தானம்,மகாபூரணாதி ,தீபாராதனை, எஜமானர்கள் சங்கல்பம், கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் கோயிலைவலம்வந்து கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது கோவிலை சுற்றிலும் இருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு,மகா தீபாரதனை நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

Tags:    

Similar News