கள்ளக்குறிச்சி தனியார் ஆசிரியர் மாயம் - போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி தனியார் ஆசிரியர் மாயமானதை அடுத்து போலீசார் விசாரணை.;
Update: 2024-03-21 05:12 GMT
காவல்துறை விசாரணை
கள்ளக்குறிச்சி கவரை தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் விஷ்ணுப்பிரியா,22; தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 18 ம் தேதி காலை 8.45 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.