பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் அறிவித்த தோழர்களம் தமிழ்நாடு நிறுவனர் கைது
பாதுகாப்பு காரணமாக இருவரை கைது செய்து விசாரணை
Update: 2024-02-28 11:29 GMT
பிரதமர் மோடி தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனால், கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் தோழர்களம் தமிழ்நாடு நிறுவனர் தி.க.சண்முகம், வேலன்செட்டியூர் இந்திரா நகரில் உள்ள மாநில அவைத்தலைவர் இரா.ராஜகோபால் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக போலீசார் கைது செய்தனர்.