கரூர் : வாக்காளர் வரைவு பட்டியலை வெளியீடு..!

கரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

Update: 2023-10-27 16:11 GMT

கரூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய தேர்தல் ஆணைத்தின் உத்திரவுபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 2024 தொடர்பாக இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் வரைவு பட்டியலை,மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,33,577- வாக்காளர்களும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2,08,398 வாக்காளர்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,07,227 வாக்காளர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,23, 221 வாக்காளர்கள் என கரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 8, 72,423- வாக்காளர்கள் உள்ளதாக அந்த வாக்காளர் வரைவு பட்டியலில் தெரிவித்துள்ளார். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், இடமாற்றம் சம்பந்தமாக அக்டோபர் 27 முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை மனுக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News