கேரளா அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து மேலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கூறி, முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சித்து வருகின்றது.
மேலும், புதிய அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. இதனைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இந்நிலையில், இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளைச் சேர்ந்த முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர். மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வரும் கேரளா அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு விவசாய சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது... தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, அணை பலவீனமாக உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து, புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி மேற்கொண்டு வருவதால். தேனி, மதுரை இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.