குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா

குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.;

Update: 2024-01-27 02:48 GMT
குளச்சல் காணிக்கை அன்னை திருத்தல கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புனித காணிக்கை அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் 424  - ஆம் ஆண்டு பங்கு குடும்ப விழா நேற்று மாலை திருகொடியேற்றத்துடன் தொடங்கியது.        

தொடர்ந்து 10 நாட்கள் இந்த விழா நடக்கிறது. முதல் நாள் நேற்று காலையில் கல்லறை தோட்டத்தில் முன்னோர் நினைவு திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் தொடர்ந்து திருக்கொடியேற்றம், சிறப்பு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெற்றது.        முட்டம் வட்டார முதன்மை பணியாளர் ஸ்டாலின் சகாய சீலன் தலைமை வைத்து திருக்கொடியேற்றினார். கோட்டார் கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் வின்சென்ட் எட்வின் அருளுரை ஆற்றினார்.      இந்த நிகழ்ச்சிகளில் புனித காணிக்கை  அன்னை திருத்தல பங்கு மக்கள், பங்கு நிர்வாக குழுவினர், அருள் சகோதரிகள், பங்கு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலி சிறப்புரை ஆகியவை நடக்கிறது.

Tags:    

Similar News