குமரி :  காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் உடல் மீட்பு

உலக்கை அருவியில் குளிக்க சென்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒய்வு பெற்ற அரசு ஊழியரின் உடல் குட்டி அணை பகுதியில் மீட்கப்பட்டது.

Update: 2024-05-20 02:54 GMT

உயிரிழந்த ரியாஸ் அலி

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அலி (66) தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடன் 5 பேர் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக  குமரி மாவட்டம் வந்துள்ளார்      பின்னர் இவர்கள் உலக்கை அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அருவியின் கீழ் பகுதியில் இவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது மாலை 5 மணி அளவில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வந்தது. 

அப்போது ரியாஸ் அலியை  வெள்ளம் அடித்துச் சென்றது. இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் சென்று தேடியும் அவர் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும்  நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இரவு 7:30 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடும்  இருளாக இருந்ததால் மேற்கொண்டு அவர்களால் தேட முடியவில்லை. இதையடுத்து நேற்று 2-ம் நாளாக பகல் முழுவதும் தேடிய பின், குட்டி அணை பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது.

Tags:    

Similar News