குமரி : தந்தை கொலையில் மகளுடன் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு ?.
பூதப்பாண்டி அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்பு இரண்டு மகள்களையும் சுரேஷ்குமார் பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25 -ம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மது போதையில் இறந்ததாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ்குமாரை தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 21 வயதான மூத்த மகள் ஆர்த்தி என்பவர் தந்தையை கம்பால் அடித்து கொன்றதாக தெரிவித்தார். ஆனால் ஆர்த்தி ஓருவரால் மட்டும் அடித்து கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நாகர்கோவில் ஏஎஸ்பி யாங்சன் டோமா பூட்டியா தலைமையிலான போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு வாலிபரும் சம்பவ இடத்தில் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த நபருக்கு இதில் தொடர்பு இல்லை என்று ஆர்த்தி கூறி உள்ளார். இருப்பினும் போலீசார் ஆர்த்தி கொடுத்த தகவலின் பெயரில் அந்த வாலிபரை பிடித்து தற்போது விசாரித்து வருகின்றனர். அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.