காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 12:47 GMT
கும்பாபிஷேக விழா
கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆண்டாங் கோவில் பகுதியில் தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு காசி விசுவநாதர் சுவாமி உடனாகிய காசி விசாலாட்சி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு எண் மருந்து சாற்றி, குடமுழுக்கு பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக வேள்விகள் நடத்தப்பட்டு புனித நீர் கோவில் கோபுரத்துக்கு கொண்டு சென்ற சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.