பொன்னியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இடைக்கழிநாடு அருகே விளம்பூர் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-01-23 08:38 GMT
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி விளம்பூர் கிராமத்தில் புதிதாக எழுந்தருளி உள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த 15ஆம் தேதி கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோ பூஜை, பூரணாதி, பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, பூரணாதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9. 30 மணி அளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கல் முழங்க கோயிலை வளம் வந்து வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். மேலும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News