ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
குழிப்பிறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. தை மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருக்கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே உள்ள குழிப்பிறை கிராமத்தில் பிரசித்து பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடத்துவது என்று ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு எடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்த யாகசாலையில் காவேரி உள்ளிட்ட புனித நதிக்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது யாகசாலையில் வைத்து பூச்சிக்கப்பட்டது. முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை என பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து நாதஸ்வர மேளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதை யடுத்து கோவிலின் கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர் சிவாச்சாரியார்கள். நிகழ்வை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன பாதுகாப்பு பணிகளை பனையப்பட்டி காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.