ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-24 02:22 GMT

கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா காலை 9மணிமுதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை முன்னிலை வகிக்கிறார். ஆலய நிர்வாகி பிரபு மற்றும் குருக்கள் சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. சுயம்புவாக தோன்றி பிரம்மாண்டமான முறையில் 72 அடி கிழக்கு ராஜகோபுரம் 73 அடி வடக்கு ராஜகோபுரம் உள்பிரகார மகா மண்டபம் வெளிப்பிரகார மகா மண்டபம் என காட்சி அளிக்கிறது. 21 ம் முதல் 4 கால யாக பூஜையும், தினந்தோறும் சொற்பொழிவு, ஆன்மிக பாடல்கள், கஜ பூஜை கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாணவேடிக்கை, மின்னொளியில் காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Tags:    

Similar News