டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த சுமைத்துக்கும் தொழிலாளி சாவு
தொழிலாளி உயிரிழந்ததையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Update: 2024-03-12 04:28 GMT
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வயது 38. இவரது மனைவி இந்திரா காந்தி வயது 31. சுமைத்துக்கும் தொழிலாளியான திருமலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருமலை தஞ்சை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று இந்திரா காந்தி திருமலையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.