பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை
பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது.;
Update: 2024-01-09 07:33 GMT
பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை
சங்கராபுரம் அடுத்த பெருமணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஞாயிறு அன்று லட்சார்சனை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன்தினம் பெரியாண்டவர், பூர்ணபுஷ்கலாம்பாள், சப்த கண்ணிகள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.